சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அவருடைய வாகன சாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் இரத்தினபுரியில் இடம்பெற்ற இத்தேகன்த சத்தாதிஸ்ஸ தேரரின் தாயாரின் இறுதிச்சடங்கில் மாகல்கந்தே சுதந்த தேரர் கலந்து கொண்டுள்ளார்.
அதேபோல, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் சிலரும் இத்தேகன்த சத்தாதிஸ்ஸ தேரரின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.