ஐக்கிய மக்கள் சக்தியினுள் தேவையற்ற பயத்தை உருவாக்கும் தேவை யாருக்கு உள்ளது? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவி இன்னொருவருக்கு செல்லக் கூடும் என்ற பயம் கட்சியினுள் நிலவுகின்றதா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்பது உறுதியாக இருக்கும் போது, அதனை விசேடமாக உறுதிப்படுத்திக்கொள்ள வாக்கெடுப்பு நடத்தியது முட்டாள்தனமான செயற்பாடு என்றும் ஹரின் சாடியுள்ளார்.
கட்சியில் கருத்து வேறுபாடுகள் இல்லை என்றும் தான் இரண்டு மாத கால விடுமுறையில் இருப்பதால் அதுகுறித்து விளக்கமாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியினுள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை யாருக்கு ஏற்பட்டது என்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைய மாட்டார்கள் என்று ஹரின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிக்க வேண்டும் என்று ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.