தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசுமாடி குடியிருப்பொன்றின் மேல் மாடியிலுள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் விருந்துபசார நிகழ்வை நடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரில் மூன்று பெண்களும், வெளிநாட்டவர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் இன்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.