November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலமாக அனுப்ப தீர்மானம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கிளினிக் வைத்திய சேவை பெறும் நோயாளர்களுக்கான மருந்து வகைகளை, கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்களை ( பெயர் , கிளினிக் இல, முழுமையான விலாசம்,தொலைபேசி இலக்கம்) அறிவித்தால் மருந்துகளை தபால் மூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்கள் வசதி கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் மேலும் இரண்டு நேரடி தொலைபேசி இலக்கங்கள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

021 222 2268, 021 315 2921, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நோயாளர்கள்  தொலைபேசி இலக்கங்களான 021 221 4249, 021 222 2261,021 222 3348 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.