2020/2021 கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜுன் 18 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மே 21 ஆம் திகதி முதல் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி ஜுன் 11 ஆம் திகதியுடன் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போதைய பயணக் கட்டுப்பாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு அதனை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதிக்கான வழி காட்டி கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையதளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உரிய விண்ணப்பத்தை இணையத்தின் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் என்பதுடன், மாணவரின் கையெழுத்திட்ட விண்ணப்பம் தபாலின் ஊடாக அனுப்பப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.