January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் 108 பேர் உட்பட வடக்கில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 108 பேர் உட்பட வடக்கு மாகாணத்தை சேர்ந்த மேலும் 143 பேருக்கு புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.