எமது மக்கள் சக்தி கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு கொடுக்கப்பட்ட பாராளுமன்ற காலம் ஜூன் மாதம் 6ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதால் அடுத்ததாக கட்சியின் பாராளுமன்ற ஆசனத்தை எனக்கு வழங்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முஸ்லிம் அடிப்படைவாதத்தை முழுமையாக தடுக்கவும், சிங்கள மற்றும் தமிழ் கலாசார,பண்பாடுகளை பாதுகாக்கவும், நில ஆக்கிரமிப்பை தடுக்கவும் அதற்கான வாத விவாதம் செய்யவும், சட்டமியற்றும் சபையில் எமது குரலை பரப்பவும் நாம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தோம்.
அதற்கான முயற்சிகளை எடுத்தும் முழுமையாக அது எமது கைகளுக்கு கிடைக்கவில்லை எனக் குறிபிட்டுள்ள அவர்,
இறுதியாக அத்துரலியே ரதன தேரருக்கு ஆறுமாத கால பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தோம்.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஆறுமாத காலத்தை கணக்கிட்டால் அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் அவருக்கான ஆறுமாத காலம் முடிகின்றது. அவர் மூன்றுமாத கால அனுமதியையே கேட்டார். எனினும் ஆறுமாதம் கொடுத்தோம். ஆகவே அவர் இப்போது உறுப்புரிமையை எனக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.