
வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக் – டாக் (TikTok) காணொலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டவர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.