(File photo)
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்குச் சென்ற ஒரு குழுவிற்கு இரகசியமான முறையில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு அரச அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரியந்த ஜீவரத்ன மற்றும் காலி பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் அதிகாரி வேணுர குமார சிங்காரச்சி ஆகிய இருவருமே இவ்வாறு உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் சோதனை பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்குச் சென்ற ஒரு குழுவிற்கு அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி ரகசியமாக வழங்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் கசிந்ததையடுத்து இது குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.