நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விடவும் அதிகரித்துள்ள அதேவேளை, கொரோனாவால் மரணமடைபவர்களின் வீதமும் 28% அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது பற்றி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பயணக்கட்டுப்பாட்டுக்கு முன்னர் தொற்றுக்கு உள்ளளானவர்களே தற்போது அடையாளம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
பயணக்கட்டுப்பாடுகளுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களிடமிருந்து 14 வாரங்கள் வரை சமூகத்தில் பரவல் அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டின் நிலைமைகளை ஆராய்ந்து 14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தொடர்வதா? என அரசு முடிவெடுக்கும் என அவர் கூறினார்.