November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபே ஜனபல கட்சியில் இருந்து பாராளுமன்றம் செல்லத் தயாராகும் ஞானசார தேரர்

file photo: Facebook/ Ape Janabala Pakshaya

அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற ஆசனத்துக்கு பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை நியமிக்கும் திட்டம் இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அபே ஜனபல கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலில் அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்ற சென்றுள்ள நிலையில், ஒப்பந்தத்தின்படி அவரது பதவிக் காலம் ஜூலை மாதம் 5 ஆம் திகதியுடன் முடிவடைவதாக அபே ஜனபல கட்சி குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் அபே ஜனபல கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனம் கிடைத்ததைத் தொடர்ந்து, யாரை பாராளுமன்றம் அனுப்புவது என்ற உட்கட்சி முரண்பாடு ஏற்பட்டது.

இறுதியில், அத்துரலியே ரதன தேரர் 6 மாதங்களுக்கு பாராளுமன்றம் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

அத்துரலியே ரதன தேரருக்கு வழங்கப்பட்ட 6 மாத காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்லவுள்ளதாக அபே ஜனபல கட்சி தெரிவித்துள்ளது.

ஞானசார தேரரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்மொழிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.