உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்மொழிந்திருந்த புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற சபைக் கூட்டத்தில், இப்புதிய நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் அர்ஜூன ஒபேசேகரவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்படும் வெற்றிடத்துக்கு மேல் நீதிமன்ற நீதியரசர் சசி மகேந்திரனின் நியமனத்துக்கும் பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சிசிர டி ஆப்ரூ ஓய்வுபெறுவதால் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவில் ஏற்படும் வெற்றிடத்துக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.