இலங்கையில் கர்ப்பினித் தாய்மார்களுக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட 35 கர்ப்பினித் தாய்மார்களுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கே இன்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.
கர்ப்பினித் தாய்மார்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நாடு முழுவதிலும் செயற்படுத்த எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 8 கர்ப்பினித் தாய்மார்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, கர்ப்பினித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.