இலங்கை முழுவதும் நீண்ட நாட்களாக அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சில குடும்பம்பங்கள் கடற்கரையோர பகுதியில் உள்ள நீரில் மட்டிகளை சேகரித்து உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் அன்றாட கூலித் தொழிலில் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது தவித்து வருகின்றன.
இவர்களில் பலர் கடற்கரையோர பகுதியில் சேற்றுக்கு நடுவில் காணப்படும் மட்டியை சேகரித்து உணவுக்காக பயன்படுத்துவதுடன், சிலர் மட்டியில் இருந்து சேகரித்த சதைகளை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர்.