
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலின் ஊடாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வருவது, தமது கட்சியைப் பாதிக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற பிரவேசம் தொடர்பாக தனியார் வானொலி ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வந்ததும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி குறித்து, ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மத்துமபண்டார எம்.பி, ‘பொதுமக்கள் அரசியலில் இருந்து நிராகரித்த ஒருவரின் பாராளுமன்ற பிரவேசம் எமக்கு பிரச்சினையாக அமையப் போவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.