
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை புதிய பல்கலைக்கழகமாக அறிவித்து கல்வி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக சட்டங்களுக்கமை 2021 ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
இலங்கை, வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகம் அழைக்கப்படும் என்றும், இதன்படி யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஜுலை 31 ஆம் திகதியுடன் இல்லாமல் செய்யப்படும் என்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வவுனியா பல்கலைக்கழகம் வியாபார கற்கைகள், பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பவியல் கற்கைகள் ஆகிய பீடங்களை கொண்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளார்.