சீனாவில் இருந்து மேலும் ஒரு மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசி மாத்திரைகள் இலங்கை வந்தடைந்தன.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை அவை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகள் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் விசேட வாகனங்களின் மூலம் கொழும்பிலுள்ள களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இதுவரை 3.1 மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசி மாத்திரைகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 65,000 ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.