இலங்கையில் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகளின் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் 239,000 பேர் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இவர்களிடையே 75,000 பேர் புற்றுநோயினாலும் 164,000 பேர் சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் 6000 சிறுநீரக நோயாளர்களும் நாள் ஒன்றுக்கு 54 புற்றுநோய் நோயாளிகளும் உயிரிழக்கின்றனர்.
“இந்த புற்றுநோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு இரசாயன உரங்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன கிருமி நாசினிகள் ஒரு முக்கிய காரணம் என்றும் இது ஒரு மோசமான நிலை என மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.
இதனிடையே நாட்டில் இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதற்கான திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.