எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கைக்குள் நுழைவது தொடர்பாக உள்நாட்டு முகவருக்கு கப்பல் தலைமை மாலுமி அனுப்பிய பல மின்னஞ்சல்களும் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் மிக மோசமான கடல் அழிவுக்கு மத்தியில் இலங்கையர்கள் உலக சமுத்திர தினத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்கள் கடந்தாலும் மீள சரிசெய்ய முடியாத ஒரு பேரழிவு இலங்கையின் சமுத்திர பரப்பில் நிகழ்ந்துள்ளதாகவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் நாட்டின் கடறப்பரப்பிற்குள் எப்படி வந்தது என்பதற்கு அரசாங்கமோ, பொறுப்பானவர்களோ இதுவரையில் பதில் அளிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல் விடயத்தில் தொடர்புபட்ட அனைவருக்கும் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.