January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நூறு நகரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் 100 நகரங்களை அடையாளங் கண்டு அவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, குறித்த நகரங்களை முறையாக அழகுபடுத்துவதற்கான நூறு நகர வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒழுங்கமைக்கப்படாத அபிவிருத்திகளால் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்டங்களில் காணப்படும் நகரங்கள் பல காலமாக நேர்த்தியற்ற, அவலட்சணமான பொதுமக்களுக்கு அழுத்தங்கள் நிறைந்த நகரமாக காணப்படுகின்றது.

அத்துடன், குறித்த நகரங்களை முறையான திட்டத்துடன் கூடிய வேலைத்திட்டத்திற்கமைய அழகுபடுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு நட்புறவான, கவர்ச்சிகரமான நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.