July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

களனி-அத்துருகிரிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் இடமாற்றம்!

கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகரங்களில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வாக நான்கு வழிச்சாலையை கொண்ட அதிவேக நெடுஞ்சாலை மேம்பாலங்களை அமைக்கும் திட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடியிருப்புக்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையில் அமைய உள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணிப் பணிகள் உள்ளிட்ட 5 திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று (07) ஆரம்பித்து வைத்தார்.

16.4 கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட இந்த புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலப்பரப்பில் வசிக்கும் 1,100 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட உள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை  134.9 பில்லியன் ரூபா செலவில் 36 மாதங்களில் நிறைவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.