July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றின் தீவிரத் தன்மை நீங்கினால் மாத்திரமே பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும்; இராணுவ தளபதி

நாட்டில் கொரோனா தொற்று பரவும் தீவிரமான சூழ்நிலை இல்லை என்பது நிபுணர் குழுக்களுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு  தளர்த்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை தீவிரமடைந்ததையடுத்து நாட்டில் கடந்த மாதம் முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டாலும் அந்தப்பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏனைய பகுதிகளுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்படாது என இராணுவ தளபதி தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூன் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு முப்படையினரும் இலங்கை பேருந்துகள் சபையும் தயாராகி வருவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.