July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் ஒக்ஸிஜனில் தங்கியிருக்கும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 441 வீதத்தால் அதிகரித்துள்ளது’

கொரோனா வைரஸ் நோயாளிகளை பொறுத்தவரை தெற்காசிய நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தை எட்டியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒக்ஸிஜனில் தங்கியிருக்கும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 441 வீதத்தால்  அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், இது நாட்டிற்கு பேரழிவாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் ஒவ்வாமைகள் சீராக அதிகரித்து வருவதாக இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸின் நாளாந்த மரண எண்ணிக்கை கிட்டத்தட்ட 50ஆக உயர்ந்துள்ளது. இது இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபின் மாறுபாட்டின் ஆபத்தை நிரூபிக்கிறது.

அத்துடன், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தங்கியிருக்கும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 441 வீதத்தால்  அதிகரித்துள்ளது.

இதனிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நோயின் தீவிரம் குறைந்து விட்டதாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

அதேபோல, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, ஒட்ஸிஜன் அதிகரிப்பதை சார்ந்து இருப்பதை புறக்கணிக்க முடியாது.

ஏனெனில், அது எதிர்காலத்தில் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கும். எனவே, பயண  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று வைத்தியர் பிரசாத் கொலம்பகே பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், இது நாட்டிற்கு பேரழிவாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.