November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சமூக வலைத்தளங்களை கண்காணிப்பது ஊடகவியலாளர்களைப் பாதிக்காது’: ஊடகத்துறை அமைச்சர்

Social Media / Facebook Instagram Twitter Common Image

இலங்கையில் போலிச் செய்திகளை வெளியிடும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் தீர்மானம், நேர்மையாக செயற்படும் ஊடகவியலாளர்களைப் எந்த வகையிலும் பாதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் உரிமையாளர்கள் யார் என்று உறுதிப்படுத்தப்படாத மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் 17 வீதமான சமூக வலைத்தளங்கள் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக 3 வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலிச் செய்திகளை வெளியிடும் சமூக வலைத்தள கணக்குகள் நேர்மையாக செயற்படும் ஊடகவியலாளர்களைப் பாதிப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.