
கற்பிட்டி – கல்குடா பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த வியாபாரிகள் இருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை சிப்பாய்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படையின் பாலாவி உப பிரிவில் கடமையாற்றுகின்ற மூன்று விமானப்படை சிப்பாய்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த 6 ஆம் திகதி கெப் ரக வண்டியொன்றில் வந்த சந்தேகநபர்கள் மூவரும் முச்சக்கர வண்டியை துரத்திச் சென்று ஒரு இலட்சம் ரூபா பணத்தை மிரட்டிப் பெற முயன்றதாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதன்படி கைதான சந்தேக நபர்கள் மூவரும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.