November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து;இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம்’

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கமானது பல தசாப்த காலத்திற்கு இருக்கும் எனவும் மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சோமாலிய தொடக்கம் இந்தோனேசிய வரையிலும், அதேபோல் இந்தியா தொடக்கம் மாலைதீவு வரையிலும் இந்து சமுத்திரம் முழுவதும் இந்த பிளாஸ்டிக் துண்டுகள் பரவுக்கொண்டுள்ளன.இதன் தாக்கமானது சாதாரணமாக கணக்கிட முடியாது.அடுத்த பல தசாப்தங்களுக்கு இதன் தாக்கம் வெளிப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்கத்தில் இருந்து மீள வேண்டுமாயின் இருக்கும் ஒரே வழிமுறை என்னவெனில், கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துண்டுகளை முடிந்தளவு கடலில் இருந்து அகற்றியாக வேண்டும். அதனை அரசாங்கம் தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இலங்கை கடற்படை இணைந்து வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக்கொண்டு உடனடியாக இந்த செயற்பாடுகளில் இறங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.