
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று (07) மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு நாட்டில் இன்று (07) மேலும் 2,646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 207,979 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 31,934 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு நாட்டில் இன்று (07) கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,670 பேர் குணமடைந்ததையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 176,045 ஆக பதிவாகியுள்ளது.