November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத தடுப்பை ‘தடுத்து வைக்கும் இடம்’ என அறிவித்து வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாத தடுப்பு பிரிவை  ‘தடுத்து வைக்கும் இடம்’ என்று பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) பிரிவு 9 இன் கீழ் இந்த அறிவிப்பு ஜூன் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகிய நான்,இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 ஆம் பிரிவின் நடவடிக்கைகளுக்காக தடுத்துவைக்கும் இடமாக அறிவிக்கிறேன் என குறித்த வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு ‘தடுத்து வைக்கும் இடம்’ என இந்த அறிவிப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரிவு 9 என்பது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்திருப்பதைக் குறிக்கிறது.அதன்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைக்க இந்த வசதி பயன்படுத்தப்படவுள்ளது.