மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை (நாளை) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு காரியாலயங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டியது கட்டாயமாகும்.
இந் நிலையில் 6 இலட்சம் பேர் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 3 இலட்சத்து 11 ஆயிரம் பேர் உள்ளனர்.
அதற்கமைய 3 இலட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற வேண்டியுள்ளது.
இருந்தபோதும் நாளை (8) 25 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது. இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.