இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு, வளர்ச்சிப் பயணத்தில் கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
2021 இலங்கை முதலீட்டு பேரவையின் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றும் போது, ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த மாநாட்டில் 65 நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முதலீட்டு சபை, லங்கா வர்த்தக சபை மற்றும் இலங்கை பங்குச் சந்தை ஆகியன ஒன்றிணைந்து 2021 இலங்கை முதலீட்டு பேரவையின் வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
2030 ஆம் ஆண்டாகும் போது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை இரு மடங்காக அதிகரிப்பதற்குரிய திட்டத்தை தாம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்துக்குத் தேவையான பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளும் இலங்கையில் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்தியத்தின் முன்னணி சேவை வழங்கும் மத்திய இடமாக கொழும்பு போர்ட் சிட்டியை மாற்றுவதே தமது இலக்கு என்றும் 2021 இலங்கை முதலீட்டு பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.