May 29, 2025 16:18:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறை மயானத்தில் தங்க நகைகளை தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யும் இடத்தில் தங்க நகைகளை தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில் தங்க நகைகள் இருப்பதாகக் கூறி அகழ்வில் ஈடுபட்ட போதே வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம், சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.