இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் விரைவில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் பரீட்சைகளை நடத்துவது குறித்து தம்மால் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
எனவே, தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.