January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாமல் ராஜபக்‌ஷ 2022 செப்டம்பரில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார்’: பிரபல ஜோதிடர் கணிப்பு

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார் என்று பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி கணித்துக் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தானே முதலில் கூறியதாகவும், அதன் பின்னர் ஏனைய ஜோதிடர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷ 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பிறந்துள்ளதாகவும், அவரது ஜாதகத்தின்படி இலங்கையின் ஜனாதிபதியாகும் கிரக யோகம் இருப்பதாகவும் ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நாமல் பிறந்த யோகத்தில் சக்திவாய்ந்த கிரகங்கள் எதுவும் இல்லை என்றாலும், அதிஷ்டமான கிரக நிலை ஒன்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.