January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெல்லவாயவில் வீடொன்றில் இருந்து இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்பு!

File Photo

மொனராகலை மாவட்டம், வெல்லவாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களுக்கமை நேற்று மாலை குறித்த வீட்டின் படுக்கை அறையில் இருந்து இருவரின் சடலங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டில் வசித்த 36 வயதுடைய கணவனும் 21 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் எவ்வாறு உயிரிழந்துள்ளார்கள் என்பது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.