May 1, 2025 3:27:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழில்நுட்பக் கோளாறால் திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

இலங்கை விமான படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று  திருகோணமலை, நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதில் பயணித்த இரு விமானிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் விமானப்படை பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

விமானிகளுக்கான அடிப்படை பயிற்சிக்காக இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று (07) காலை 10.22 மணிக்கு சீனக்குடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம் 10.48 மணியளவில் தரையிறக்கப்பட்டதாகவும், விமானிகளின் சாதுர்யத்தினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு விமானிகளின் திறமையால் ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டது என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விமானப்படை கமாண்டர், எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அறிவுறுத்தியுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.