October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக்கொண்டால் மாத்திரமே பயனளிக்கும்’

சினோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் தடுப்பூசிகளை பொறுத்த வரையில் முதலாம் தடுப்பூசியாக சினோபார்மை ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியையும் ஏற்றியாக வேண்டும். இல்லையேல் எந்த பலனும் கிடைக்காது என்கிறார் ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகில் மூன்று விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.இதில் எம்.ஆர்.என்.ஏ.தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பைசர் மற்றும் மொடேனா தடுப்பூசிகளாகும்.

அதேபோல் வைரஸின் வெளிப்படையான புரோட்டின்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக், அஸ்ட்ராசெனிகா மற்றும் ஜொன்சன் அன் ஜொன்சன் தடுப்பூசிகள். அதேபோல் கொரோனா வைரஸை பலமிழக்கச் செய்யும் வைரஸை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சினோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் தன்மைகளில் மாறுபட்டவை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.