January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய்வு

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில்,பாராளுமன்றத்திலும் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்றத்தை கூட்டாது 8 ஆம் திகதியன்று மாத்திரம் சபை அமர்வுகளை கூட்டுவது குறித்து ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டுவார காலத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்தும் பாராளுமன்ற ஊழியர்கள் பலருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதனை அடுத்து தொடர்ச்சியாக பாராளுமன்றம் மூடப்பட்டுள்ள நிலையில்,காரியாலய பணிகள் மீண்டும் நாளை (8) ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை தீர்மானிக்க கட்சி தலைவர்கள் கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடுகின்றது.இதன்போது செவ்வாய்க்கிழமை அமர்வுகளை மாத்திரம் நடத்துவது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழியர்களை பணிகளுக்கு வரவழைக்க முடியாதமையே இதற்கான பிரதான காரணமாகும் என பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.