November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதலாம் தரத்தில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை!

2022 ஆம் ஆண்டு முதல், முதலாம் தரத்திற்கான வகுப்பறை ஒன்றில் 45 மாணவர்களை இணைத்து கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனைகள் கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில் அதில் வகுப்பறை ஒன்றிற்கு 40 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முதலாம் தரத்தில் ஒரு வகுப்பில் 35 ற்கு மேற்பட்ட மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2012 இல் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மீறி கல்வியமைச்சு செயற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.