இலங்கையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அடுத்த புதன்கிழமை முதல் தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்தியர்களின் வேண்டுகோளின் பேரில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்ததாக அறிவித்தது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 8 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணமடைந்துள்ளதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசியின் முதலாவது டோஸ் மட்டும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி திட்டம் புதன்கிழமை முதல் கொழும்பு காசல் வைத்தியசாலையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே நாளில் பிலியந்தலை சுகாதார பிரிவின் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.