
பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நகை அடகு வைக்கும் நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அரசாங்கம் இது குறித்து விவாதித்து வருவதாகவும் சுகாதார துறையுடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.