January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதி செயல்பாட்டில் பாரிய முறைகேடுகள்’; அமைச்சர் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!

பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதி செயல்பாட்டில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதில் அரச சார்பற்ற பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மத அமைப்புகளால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் எஸ்கிமோக்கர்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் விற்கக்கூடியவர்களால் தயாரிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை இன்று (6) தங்கல்ல வனவாசல குடவிஹாராவில் கையளித்த பிறகு ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த மருத்துவ உபகரணங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.