இலங்கை ஒரே நேரத்தில் இரண்டு விடயங்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகிய விடயங்களில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றில் இருந்து மீட்கும் அதேவேளை எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் கரையோர சமூகத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கும் இலங்கைக்கு உதவ வேண்டும் என்று ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.