
மொரட்டுவை சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரவலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் 3 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ பரவல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மொரட்டுவை பிரதேச சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த பல்கலைக்கழக மாணவி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.