January 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அயல் வீட்டு நபருக்கு குறுந்தகவல் அனுப்பியதால் ஏற்பட்ட மோதலில் இரு வீட்டின் கணவர்களும் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு,பொரளை  பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  குடியிருப்பு பகுதியில் அயல் வீட்டு ஆண் நபருக்கு பெண் ஒருவர் “கோஹோமத சுது” (எப்படி இருக்கிறீர்கள்) என குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக தெரிய வருகின்றது.

கணவர் இது குறித்து விசாரித்தபோது குறுந்தகவல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக அந்தப் பெண் தனது கணவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து குறித்த பெண்ணின் கணவர் குறுந்தகவல் தொடர்பில் அயல் வீட்டு நபருடன் முரண்பட்டுள்ளார். தனது மனைவிக்கும் அயல் வீட்டு நபருக்கும் இடையே தகாத உறவு உள்ளதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இரண்டு குடும்பங்களினதும் கணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மோதலில் 8 பேர்வரை கத்தி குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காயங்களுக்கு உள்ளான கணவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.