பயணப் பாதுகாப்பு கவச முறையில் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணப் பாதுகாப்பு கவச முறையன்றி வருபவர்களாக இருந்தால், ஒரு விமானத்தில் 75 பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா கவச பாதுகாப்பு முறை விசாக்கள், குடியுரிமை விசாக்கள் மற்றும் இரண்டடை பிரஜாவுரிமை பெற்றவர்கள் இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து சுற்றுலாத்துறை அமைச்சு விதிவிலக்கு அளித்துள்ளது.
“இலங்கை சுற்றுலா கவச பாதுகாப்பு முறையின் இலத்திரனியல் பயண அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பயணிகள் வெளியுறவு அமைச்சு அல்லது சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் அனுமதியைப் பெறத் தேவையில்லை.
இலங்கையில் வதிவிட விசா பெற்ற அல்லது இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் கவச பாதுகாப்பு பயண முறையின் ஊடாக, சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகாரத்துடன் வரலாம்” என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு விமான சேவைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.