இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.
இன்றைய தினம் (ஜூன் 05) மேலும் 2,280 பேருக்கு தொற்றுறுதியானதையடுத்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 201,534 ஆக பதிவாகியுள்ளது.
இதனிடையே நாட்டில் இன்று, (05) மேலும் 1,851 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 166,132 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 33,746 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், 1,656 பேர் உயிரிழந்துள்ளனர்.