January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். இந்திய துணைத் தூதரக பெயர் பலகையில் சிங்கள மொழியும் சேர்க்கப்பட்டது

file photo

யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக பெயர் பலகையில் சிங்கள மொழியும் சேர்க்கப்பட்டது.

இந்திய துணைத் தூதரக பெயர் பலகையில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சிங்கள மொழியை சேர்க்க நடவடிக்கை எடுத்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆரம்பமாக, துணைத் தூதரக பெயர் பலகையில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளே, காணப்பட்டன.

கொழும்பு போர்ட் சிட்டி பெயர் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு பதிலாக, இந்திய துணைத் தூதரகத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே, பெயர் பலகையில் சிங்கள மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பலகை 5 வருடங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்டதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.