
மாவனல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு சம்பவத்தில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.
வீடொன்றின் மீது மண் மேடு சரிந்ததில் இவர்கள் காணாமல் போயுள்ளனர்.
மண் மேடு சரிந்ததில் காணாமல் போனவர்களைத் தேடி, இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேநேரம், வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்சரிவு அபாயமுள்ள வீட்டில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.