
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்,வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அவசர சிகிச்சை பிரிவு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது;
யாழ்.போதனா வைத்தியசாலையின் இரு விடுதிகளும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இரு விடுதிகளிலும் நோயாளர்கள் நிரம்பியிருக்கிறது.இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.