முதல் மற்றும் இரண்டாவது அலைகளுடன் ஒப்பிடும்போது மூன்றாவது அலையில் வயதானவர்கள் வீட்டில் இறக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களில், குறிப்பாக புத்தாண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் 60 வீதமான கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 2020 முதல் கொவிட் இறப்புகளுடன் ஒப்பிடும்போது, சிங்கள / தமிழ் புத்தாண்டுக்கு பிறகு மூன்றாவது அலையின் போது 60 வீதமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
“முதல் மற்றும் இரண்டாவது கொவிட் அலைகளின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தற்பொழுது வைரஸ் பரவுவது ஆபத்தான அதிகரிப்பைக் காட்டுகிறது.இது ஒரு சிக்கலான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது.மொத்த இறப்புகளுடன் ஒப்பிடும்பொழுது 58 வீதமான இறப்புகள் மே மாதத்தில் நிகழ்ந்துள்ளன.
“73 முதல் 75 வீதம் வரையான இறப்புகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்ந்துள்ளன.தற்போதைய முடக்கல் காலத்தில் கூட, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதாவது வைரஸ் வீடுகளுக்குள் நுழைந்துள்ளது.முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது பெரும்பாலான இறப்புகள் வீடுகளில் பதிவாகியிருக்கவில்லை என்றும் டாக்டர் பெர்னாண்டோ கூறினார்.